Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 16, 2016

ஜெயலலிதா தொகுதியில் வாக்கு 'மை' அழிவதால் பரபரப்பு! (வீடியோ)


முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்கேநகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு விரலில் வைக்கப்படும் 'மை' அழிவதால் பூத் ஏஜென்டுகள் அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டதால் உடனடியாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
சென்னை ஆர்கேநகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக சார்பில் சிம்லா முத்துசோழனும், மக்கள் நலக்கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தை கட்சியின் வசந்திதேவியும் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்கேநகர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு விரலில் வைக்கப்படும் 'மை' தானாகவே அழிந்து விடுவதாக புகார் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்கேநகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை புதுவார்டு நேருநகர் 8வது தெருவில் உள்ள இசிஐ மெரிட் மேல்நிலைப்பள்ளியில் 14 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடியில் ஏராளமான வாக்காளர்கள் வாக்களித்து வந்தனர். திடீரென மின்சாரம் தடைபட்டது. பின்னர் சில நிமிடங்கள் கழித்து மின்சாரம் மீண்டும் வந்தது. அப்போது, வாக்காளர்களுக்கு விரவில் வைக்கப்படும் 'மை' தானாகவே அழிந்தது. இதனை பார்த்த எதிர்க்கட்சியை சேர்ந்த பூத் ஏஜென்டுகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக பூத் அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை காவல்துறையினர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றினர். தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. இது குறித்து எதிர்க்கட்சியை சேர்ந்த பூத் ஏஜென்டுகள் கூறுகையில், அதிகாரிகளுக்கு தெரியாமல் இப்படி தரமற்ற 'மை' வர வாய்ப்பில்லை. கள்ள ஓட்டு போடுவதற்காக இப்படி ஈடுபடுகிறார்கள்" என்று குற்றம்சாட்டினர். இதனிடையே, இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.






No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.