காஞ்சிபுரத்தில் குப்பையில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகளால் முறைகேடு நடந்துள்ளதாக, ம.ந.கூட்டணி கட்சியினர் தேர்தலை நிறுத்த கோரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தேர்தல் பிரசாரத்திற்காக, நேற்று காலை, 10:30 மணியளவில், ம.ந.கூட்டணி கட்சியினர் ஓரிக்கை பணிமனை வழியாக சென்றனர்.
அப்போது, சாலை ஓரம் குப்பையில் வாக்காளர் அடையாள அட்டைகள், அதனுடன் ஓட்டு போடும் முத்திரை, கடந்த, 1997ம் ஆண்டு வாக்காளர்கள் புகைப்படத்துடன் கூடிய பெயர் பட்டியலும்
கொட்டப்பட்டு கிடந்தது.அதை பார்த்து, காஞ்சிபுரம் தொகுதி தேர்தல் அலுவலரும், துணை ஆட்சியருமான அருண் தம்புராஜுவுக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் பொதுமக்கள் அங்கு கூடினர்.
குப்பையுடன் வாக்காளர் அடையாள அட்டைகள் கிடப்பதை பார்த்து, அவர்கள் எடுத்து, எந்த பகுதி வாக்காளர்கள் என படித்து பார்த்தனர், உத்திரமேரூர் தொகுதி, காஞ்சிபுரம் தொகுதி
வாக்காளர்கள் பெயர் அதில் இடம் பெற்றன. அதில், 2013ம் ஆண்டு எடுக்கப்பட்டது என, தெரியவந்தது.தேர்தல் அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். ம.ந.கூட்டணியை சேர்ந்தவர்கள் இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதனால்
தேர்தலை ஒத்திவைக்கும்படி தேர்தல் அதிகாரியிடம் கூறினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.பின், குப்பையில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டையை மூடை கட்டி, தேர்தல் அலுவலர்
அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.இது குறித்து, தொகுதி தேர்தல் அலுவலர் அருண் தம்புராஜ் கூறுகையில், ''இந்த சம்பவம் எப்படி நடந்தது என, எனக்கு தெரியாது. விசாரணை செய்து, இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.