Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 25, 2016

வியாதி வருவதற்கான முன்னெச்சரிக்கை தான் வாந்தி வருவது


மனிதனை விட ஓரறிவு குறைவான விலங்குகள் சாப்பாட்டு விஷயத்தில் புத்திசாலிகள். எலி, பூனை போன்றவை என்ன பசியாக இருந்தாலும் உணவை உடனே சாப்பிட்டு விடாது. முதலில் முகர்ந்து பார்க்கும். தனக்கு சரியான ஆபத்தில்லாத உணவு என்ற நம்பிக்கை வந்தால் மட்டுமே சாப்பிடும். ஆனால் மனிதன் அப்படி இல்லை. கிடைத்ததை எல்லாம் சாப்பிடும் ரகம்.

அப்படி சாப்பிட்ட உணவு சரியில்லை என்றால் உடனே வயிற்றைப் புரட்டிக்கொண்டு வாந்தி எடுத்து விடுகிறோம். இது ஒரு வியாதி கிடையாது. வியாதி வருவதற்கான முன்னெச்சரிக்கை. வயிற்றுக்குள் மோசமான பாக்டீரியாக்கள் அல்லது கெமிக்கல் புகுந்துவிட்டது என்பதை தெரிவிக்கும் எச்சரிக்கை செயல்.

வாந்தி எடுக்கும் போது நம் உடலுக்குள் என்ன நடக்கிறது என்றால் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவோ, தேவையற்ற கெமிக்கலோ வயிற்றின் இரைப்பைக்குள் நுழைந்துவிட்டால் அதனை உடனே கண்டுபிடிப்பது இரைப்பை சுவர்களில் உள்ள உணர்வு செல்கள்தான்.

இதுதான் நரம்புகள் மூலமாக மூளைக்குத் தகவலைத் தெரிவிக்கிறது. இந்த நரம்புக்கு வேகஸ் என்று பெயர். மூளைக்கு தகவல் கிடைத்ததும், மூளை கட்டளைப் பிறப்பிக்கிறது. அதன்படி ஒத்துக்கொள்ளாத உணவை சிறுகுடல் ஒன்றரையடி மேல் நோக்கி தள்ளிவிடுகிறது.

அது வாந்தியாக வெளியே வந்து விடுகிறது. சிறுகுடலில் இருக்கும் சிறு பகுதிகள் அத்தனையும் சேர்ந்து சுருங்கி இரைப்பைக்குள் இருக்கும் தகாத உணவை வாயின் வழியாக வெளியே தள்ளியாக வேண்டும். அதற்கு ஜீரண மண்டலம் மட்டுமல்லாமல், அதற்கு சம்பந்தமே இல்லாத சிறுகுடலைச் சுற்றி இருக்கும் தசைகள் கூட, சிறுகுடலை சுருக்கி உணவை வெளியே தள்ளுவதற்கு உதவி செய்கிறது.

இது ஒரு தடவை மட்டும் நடந்தால் தப்பில்லை. ஆனால் தொடர்ந்து ஒரு நாளிலே நாலைந்து முறைக்கு மேல் வாந்தி எடுத்தால் அது ஆபத்து. தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால், உடலில் இருக்கும் நீரின் அளவு குறைந்து விடும். இதனால் ரத்த அழுத்தமும் குறையும்.

உடம்பில் இருக்கும் நீர் மற்றும் திரவங்களின் அளவு குறையும்போது, நம் உடலில் உள்ள கோடானகோடி செல்களுக்கு இடைப்பட்ட இடத்தில் இருக்கும் தண்ணீரும், திரவமும் உடம்பை விட்டு வெளியேறுகிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப செல்களின் உள்ளே இருக்கும் தண்ணீரும், திரவமும் செல்களை விட்டு வெளியே கிளம்பிவிடும்.

ஒத்துக்கொள்ளாத உணவு என்று இல்லை. பஸ்சில் செல்லும் போது கூட சிலருக்கு வாந்தி வருகிறது. பல்லி விழுந்த உணவை பார்த்த மாத்திரத்திலே பலருக்கும் வாந்தி வந்து விடுகிறது. சில வகை வாசனை கூட குமட்டும் உணர்வை ஏற்படுத்திவிடும். எனவே வேண்டாத உணவை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.