Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 25, 2016

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வேண்டுகோள்​ விடுத்த விஷால்


தென்னிந்திய நடிகர் சங்கம் பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக அதன் பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் தனியார் பேருந்து (ஆம்னி பஸ்) உரிமையாளர்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் மூலமாக வேண்டுகோள் கடிதம் ஒன்று விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

"பல கோடி முதலீடு செய்து தயாரிக்கப்படும் திரைப்படம் தியேட்டரில் ரசிகர்கள் ரசித்தால் மட்டுமே போட்ட முதலீட்டை திரும்ப எடுக்க முடியும்! இதில் தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் திருட்டு விசிடி ஆகியவற்றின் பாதிப்புகளை மீறி வெற்றி பெற போராட வேண்டிய நிலை, இது திரை உலகை சார்ந்த அனைத்து பிரிவினர்களுக்கும் சவாலாக உள்ளது.

இந்நிலையில் தனியார் பேருந்துகளில் சட்டவிரோதமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவது சமீபகாலங்களில் சர்வ சாதாரணமாகி விட்டது. அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்களை மீறி பேருந்தை ஓட்டுவதும், பயண சீட்டு எடுக்காமல் பயணம் செய்வதும் எப்படி சட்டவிரோதமானதோ, அது போலவே திருட்டு விசிடியை பஸ்களில் ஒளிபரப்புவதும் சட்டவிரோதமானதே!

அதனால், திரை உலகை காப்பாற்ற நாங்கள் பல நிலைகளில் போராடி வருகிறோம்! அதற்காக தமிழகமெங்கும் எங்கள் நடிகர்களின் ரசிகர் மன்றங்களின் மூலமாக பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை தங்கள் கவனத்தை மீறி ஓட்டுனர்களால் இந்த தவறு நடந்திருந்தால் இனிமேல் இது நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுகிறோம். இதற்கு தங்களுடைய முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்." இவ்வாறு அவர் கேட்டு கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.