Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 22, 2016

தேமுதிக தொண்டர் தற்கொலை: விஜயகாந்த் இரங்கல்


தேமுதிக தொண்டர் தற்கொலை செய்து கொண்டதற்கு அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் கொங்கராயனூர் கிளைக்கழக செயலாளர் சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். தற்கொலை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. தேமுதிகவின் தொண்டர்கள் யாராக இருந்தாலும் வாழ்க்கையில் போராடி வெற்றி பெற வேண்டும் என்ற தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் இருக்க வேண்டும். அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்.

இதற்கு தற்கொலை ஒரு தீர்வாகாது. இதுபோன்ற தற்கொலை முடிவுகளால் சம்பந்தப்பட்டவர்களின் மனைவி குழந்தைகள் எப்படிப்பட்ட பாதிப்புகளை அடைவார்கள் என்பதை சிந்தித்து பார்த்தால் நிச்சயமாக இதுபோன்ற செயல்களில் எவரும் ஈடுபடமாட்டார்கள். சுப்பிரமணியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இதுபோன்ற தற்கொலை முயற்சியில் யாரும் எந்தக் காலத்திலும் ஈடுபட வேண்டாம்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.