Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 5, 2016

முதல்வர் ஆகாவிட்டால் வெளிநாடு பயணம் விஜயகாந்த் ரகசிய திட்டம் அம்பலம்


தேர்தல் முடிவில் எதிர்பார்த்தது நடக்காவிட்டால், குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு செல்வதற்கு, விஜயகாந்த் ரகசியமாக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தை கழிப்பதற்காக, குடும்பத்துடன் வெளிநாடு செல்வார். கட்சி துவங்குவதற்கு முன்பிருந்தே, இதை பின்பற்றி வருகிறார். கட்சி துவங்கிய பின், வெளி நாட்டிற்கு, ஓய்வுக்காக மட்டுமின்றி, தேர்தல் கூட்டணி பேச்சு நடத்தவும் அவர் சென்று வந்துள்ளார்.

பா.ஜ., கூட்டணி: கடந்த, 2014ம் ஆண்டு சிங்கப்பூர், மலேஷியா நாடுகளுக்கு சென்று ரகசிய பேச்சு நடத்தினார். அதன்பின் தான், பா.ஜ.,கூட்டணியில் இணைந்தார். ஆனால், தற்போது அவர் வெளிநாட்டுக்கு செல்ல வில்லை. உள்ளூரிலேயே முடிவு செய்து மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார்.

தே.மு.தி.க., - -ம.ந.கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜய காந்த் அறிவிக்கப்பட்டார்.

இந்த கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கும் என, அதன் தலைவர்களான விஜயகாந்த், வைகோ, வாசன், திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் கருதினர்.
ஆனால், மக்கள் மத்தியில்,எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. இருப்பினும், வேட்பாளர்களை யும், கட்சியினரையும் சோர்வடைய விடாமல், பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என்று கருதி, வைகோ போட்டியில் இருந்து விலகிக்கொண்டார். விஜயகாந்த் மற்றும் திருமாவளவன் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

ஆனால், எதிர்பார்த்தபடி கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஈர்ப்பும்; எதிர்பார்ப்பும் இல்லை என்பதை, பிரசாரத்திற்கு சென்ற விஜயகாந்த் உணர்ந்து விட்டார். உளுந்துார்பேட்டையில், தான் தேறுவதே கடினம் என்பதையும் கண்டறிந்து விட்டார்.

குடும்ப சகிதமாக...தேர்தல் முடிவுகள் சாதகமாக வரவில்லை என்றால், முடிவுகள் வெளியாகும் நாளிலேயே, குடும்பத்துடன்வெளிநாடு செல்வதென முடிவெடுத்து விட்டார்.

அங்கு சென்று, சில நாட்கள் இருந்து விட்டு, பின், சென்னை திரும்பவும் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:
விஜயகாந்தின் தொண்டை பிரச்னைக்கு சிகிச்சை, தன் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும், 'தமிழன் என்று சொல்' பட சூட்டிங் என பல்வேறு நிகழ்வுகளுக்காக, தேர்தல் முடிந்த கையோடு, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின. 

கடைசியாக கடிதம்: உளுந்துார்பேட்டை தொகுதியில், விஜயகாந்துக்கு ஆதரவு அதிகரிக்க வில்லை. இதையடுத்து, கடைசி கட்ட முயற்சியாக, முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி பாணியில், வாக்காளர்களுக்கு கடிதம் எழுத, விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். கூட்டணி உருவான காரணத்தையும், பெண்கள் மற்றும் புதிய வாக்காளர்களை கவரும் வகையிலும், உருக்கமாக இந்த கடிதம் அமையவுள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.