ஆன்லைன் வர்த்தகம் என்னும் அந்நிய சக்திகளை விரட்டியடிக்க காந்திய வழியிலும் நேதாஜி வழியிலும் போராடவேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறினார்.
அச்சரப்பாக்கத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 33-வது வணிகர் தின விழா நேற்று நடந்தது. மாநாட்டிற்கு பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய வெள்ளையன், “அந்நிய சக்திகளின் ஆதிக்கம் வணிகத்தில் நுழைந்துள்ளன. கடுமையான போராட்டங்களுக்கும், கடும் சூழல்களை எதிர்கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். அவர்களை விரட்டியடிக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தையும் எதிர்த்து போராட வேண்டும். அதற்கு காந்திய வழியிலும், நேதாஜி வழியிலும் போராட தயாராக இருக்க வேண்டும்,
வணிகக்கடைகளின் அருகே இருக்கும் மதுபானக் கடைகளை உடனே அகற்ற வேண்டும். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளதால் யாருக்கு ஆதரவு என்பதை பேரவையின் மாநில, மாவட்ட, அனைத்து நிர்வாகிகளின் கூட்டத்தை கூட்டி முடிவுகள் எடுத்து அறிவிக்கப்படும்” என்றார்.

ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை, வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை சுதேசி வணிக எழுச்சி நாளாக அறிவிப்பது, கொள்முதல் பணத்தைக் கூட பறிமுதல் செய்யும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டிப்பது, சிறு உணவகம் மற்றும் டீக்கடைகள் இரவு ஒரு மணி வரை திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும், பஸ்நிலையங்கள், ரெயில்நிலையங்கள் அருகில் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் , மது கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.