Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 5, 2016

வடபழனியில் மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை முயற்சி



போரூர் வெங்கடேசுவரா நகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி. அவரது மகன் சுதாமன் (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபரான இவர் லண்டனில் எம்.எஸ். படித்து விட்டு சென்னை திரும்பினார். இந்த நிலையில் அவரது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத நிலையில் அவர் மனஅழுத்தத்தில் இருந்து வந்தார். இதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் சுதாமன் ஆலந்தூரில் இருந்து நேற்று இரவு வடபழனிக்கு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். வடபழனி ரெயில் நிலையத்தில் ரெயிலில் இருந்து இறங்கிய அவர், ரெயில் புறப்படும் போது திடீரென்று மெட்ரோ ரெயில் முன் பாய்ந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மயங்கிய நிலையில் அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்து பற்றி வடபழனி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.