உத்தரகாண்ட் மாநிலத்தில் வனப்பகுதியில் ஏற்பட்டு உள்ள தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர்கள் பார்க்கும் நிலை தெளிவாக இல்லாத காரணத்தினால் வெளியேறி உள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் பரவியிருக்கும் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
இதனால் காடுகளில் இருந்த செடிகள் தீப்பற்றி எரிந்து பரவிக்கொண்டு இருக்கிறது. வனப்பகுதியில் தீயை அணைக்கும் பணியில் இறங்கிய விமானப்படை எம்.ஐ. 17 ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரை தெளிக்கும் பணியை தொடங்கியது. 13 மாவட்டங்கள் உள்ளடங்கிய காட்டில் தீ பரவிஉள்ளது. தீ விபத்து இதுவரையில் 7 பேரது உயிரை பலிக்கொண்டு உள்ளது. தீயை அணைக்கும் பணியில் சுமார் 6000 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தேசிய பேரிடர் படை, மாநில பேரிடர் படை மற்றும் ராணுவமும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
சாமொலி, பவுரி, ருத்ரபிராயக், தெர்கி, உத்தரகாசி, அல்மோரா, பிதோராகார்க் மற்றும் நைனிடால் தீயினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு பகுதியில் தேசிய பேரிடர் படையும், மாநில பேரிடர் படையும் தீயை கட்டுக் கொண்டு வந்துஉள்ளது. விமானப்படை நைனிடால் மற்றும் பவுரிக்கு ஹெலிகாப்டர்களை அனுப்பிஉள்ளது. அருகே இருக்கும் பகுதியில் தண்ணீரை எடுத்துக் கொண்டு ஹெலிகாப்டர்கள் தீ பற்றி எரியும் பகுதியில் தெளிக்க உள்ளது. ராணுவமும் தீயை அணைக்கும் பணி முழுமையாக ஈடுபட்டு உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை பிரதம அமைச்சகமும், உள்துறை அமைச்சகமும் கண்காணித்து வருகிறது.
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உத்தரகாண்ட் மாநில தீ விபத்து நிலவரம் தொடர்பாக அம்மாநில தலைமை செயலாளரிடம் பேசிஉள்ளார். உள்துறை அமைச்சக அதிகாரிகளிடமும் ஆலோசித்து உள்ளார். நிலையை கண்காணிக்க உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிஉள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் வனப்பகுதியில் ஏற்பட்டு உள்ள தீயை அணைக்க மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும் கேட்டுக் கொண்டு உள்ளார். மாநிலத்தில் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் ஏரிகளில் இருந்து தண்ணீரை எடுத்துச் சென்று தீ பிடித்து எரியும் பகுதியில் தெளித்தது. ஆனால் தொடரமுடியவில்லை. மேற்பகுதியில் கடும் புகைமூட்டம் காணப்படுகிறது. இதனால் தெளிவான காணும்நிலை இல்லை, எனவே ஹெலிகாப்டர்கள் திரும்பின என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் தேசிய, மாநில பேரிடர் படைகள் மற்றும் ராணுவம் தீயை அணைக்கும் பணியை தொடர்ந்து வருகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.