வடமதுரை அருகே காரின் டயர் வெடித்து நான்கு வழிச்சாலை மைய தடுப்பு திட்டில் மோதி கவிழ்ந்ததில் சென்னையை சேர்ந்த இருவர் பலியாகினர்.
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் மோகனரெங்கன், 45. இவரது மனைவி ஜெயலட்சுமி, 38, தாயார் குணசுந்தரி, 74, மகன் விஷ்ஷவர்த்தன்,15.இவர்களுடன் அண்ணாநகரைச் சேர்ந்த நண்பர்கள் அசோக்குப்தா, 64, சற்குணம், 60. மற்றும் ஒருவர் என ஏழு பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். காரை மோகனரெங்கனும், சற்குணமும் மாறி மாறி ஓட்டி வந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை தங்கம்மாபட்டி அருகில் நேற்று மதியம் மோகனரெங்கன் காரை ஓட்டி வந்தபோது, முன்பக்க டயர் வெடித்தது. இதையடுத்து நான்குவழிச்சாலையின் மைய தடுப்பு திட்டில் மோதி உருண்டோடி கவிழ்ந்தது. விபத்தில் சற்குணம், அசோக்குப்தா சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்த மற்றவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.