நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தில் கடந்த 2004-ல் சுனாமியின் போது பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்காக தொண்டு நிறுவனங்கள் 371 சுனாமி வீடுகளை கட்டிக் கொடுத்தன. ஒவ்வொரு வீடும் ரூ.3 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. அனைத்து வீடுகளிலும் மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்த வீடுகளில் 132 வீடுகள் முற்றிலும் சேதமடைந்து குடியிருப்பதற்கு தகுதியற்ற நிலையில் உள்ளன. சிமென்ட் காரைகள் பெயர்ந்தும் முன்பக்கமும் வீட்டின் பல பகுதிகள் இடிந்து விழுந்துவருகிறது.
நேற்று வேதாரண்யத்தில் பெய்த 6 செ.மீ மழையில் வெள்ளப்பள்ளம் மீனவர் காலனியை சேர்ந்த ராஜா என்பவர் வீட்டின் முன்பக்க லாப்ட் இடிந்து விழுந்தது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் விபத்திலிருந்து தப்பினர். கட்டி முடிக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆன நிலையில் வாழ்வதற்கு தகுதியற்ற நிலையிலுள்ள இந்த வீடுகளை உடனடியாக இடித்து விட்டு அரசு தரமான வீடுகளை கட்டி தர வேண்டுமென இப்பகுதி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.