Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 27, 2016

நீதி கிடைக்க ஜெயலலிதா பாடுபடுவார்: இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் நம்பிக்கை


இலங்கை தமிழர்களின் அரசியல்,‌பொருளாதார நடவடிக்கைகளை வென்றெடுக்க முதலமைச்சர் ஜெயலலிதா உறுதுணையாக இருப்பார் என இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 53 வது அமர்வில் உரையாற்றிய அவர், தற்போது, வடகிழக்கு மாகாணங்களில் இலங்கை ராணுவத்தினர் முகாம் இட்டுள்ளதாக கவலை தெரிவித்தார்.

இலங்கை தமிழர்கள் சந்திக்கும் அரசியல் ஒடுக்கு முறை குறித்து நீதி கிடைக்க இந்திய அரசிடம் எடுத்துரைக்கும் தார்மீக பொறுப்பு முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இருப்பதாக‌ கூறினார். ‌இலங்கை மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவு‌ம், பாதுகாப்பிற்காகவும் கொள்கை பிறழாமல் துணிந்து குரல் கொடுத்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா என்று தெரி‌வித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.