Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 19, 2016

சட்டமன்ற தேர்தல் 2016: இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்


சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பிற்பகலுக்குள் ஆட்சியமைக்கப் போவது யார் என்பது தெரியவரும். இதற்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு 232 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 68 மையங்களில் எண்ணப்படுகின்றன. அதற்கென 3 ஆயிரத்து 236 மேசைகள் அமைத்து, அதில் ஒவ்வொன்றிலும் கேமரா பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. முதலில் தபால் வாக்குகள் ‌எண்ணி முடிக்கப்பட்டு, அரை மணி நேரத்திற்குப் பின்னர் ‌இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். மின்னணு இயந்திரங்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். வாக்கு எண்ணிக்கைப் பணியில் 9 ஆயிரத்து 621 பேர் ஈடுபடவுள்ளனர். 3ஆயிரத்து 971 நுண்பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிடவுள்ளனர். வேட்பாளரின் வெற்றி வித்தியாசம் தபால் வாக்குகளைவிட குறைவாக இருந்தால் மீ‌ண்டும் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. வாகனங்கள், வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து நூறு மீட்டருக்கு தொலைவில்தான் நிறுத்த அனுமதிக்கப்படும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.