" மதிப்பெண்கள் என்பது நீங்கள் எழுதிய தேர்வின் மதிப்பீடு மட்டுமே, வாழ்வின் மதிப்பீடு அல்ல. அதிக மதிப்பெண்கள் பெறாதவர்களும் தேர்ச்சி அடையாதவர்களும் கூட பெரும் சாதனையாளர்களாக உருவாக முடியும்" என்கிறார் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், காளாச்சேரி மேற்கு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் ஆனந்த்.
'ஆசிரியப் பணி என்பது கல்வி கற்பிப்பதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது. சமூக பங்களிப்பும் அவசியம்' என்ற உயரிய லட்சியத்தைக் கொண்டிருக்கிறார் ஆனந்த்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, இக்கிராமத்தில் அடிக்கடி தற்கொலை மரணங்கள் நிகழ்வது வாடிக்கையாக இருந்தது. இக்கிராமத்தில் சுமார் 300 வீடுகள் மட்டுமே உள்ளன. பத்தே ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தற்கொலை மரணங்கள் இங்கு நிகழ்ந்திருக்கின்றன. வயது, சாதி,வர்க்கம், ஆண், பெண் பாகுபடில்லாமல் பலரும் இந்த முடிவை தேடியிருக்கிறார்கள். அவநம்பிக்கை, பலவீனமான மனசு ஆகியவைகளால் தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
2009-ம் ஆண்டு ஆங்கில ஆசிரியராக இங்குள்ள பள்ளிக்கு வந்த ஆனந்த், இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். 'இந்த அவலநிலையை மாற்றியே தீர வேண்டும். இந்த துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என சபதமேற்று மாணவர்கள் மூலமாகவே நாடகம், விழிப்புணர் பேரணி, மக்கள் சந்திப்பு என நிகழ்த்தி தீவிரமாக செயல்பட்டிருக்கிறார். மக்கள் மனதில் மாற்றத்தை உருவாக்கி, நம்பிக்கையை விதைத்து, தற்கொலை இல்லாத கிராமமாக இதனை மாற்றினார். கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு தற்கொலை மரணம் கூட இங்கு நிகழவில்லை.
இதனை பாராட்டி, இவருக்கு 'சமூக மாற்றத்திற்கான விருது' வழங்கி கவுரவித்திருக்கிறது சர்வதேச அளவில் செயல்படும் 'ரிவர்சைடு' என்ற சமூக சேவை அமைப்பு.
விகடனும் இவருக்கு விருது வழங்கி கவுரவப்படுத்தியது.தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரங்களில், மாணவர்களின் மனதில் நம்பிக்கையை விதைக்கும் உன்னத பணியையும் செய்கிறார் ஆசிரியர் ஆனந்த்.
''நான் சின்ன வயசுலயே அப்பா அம்மாவை இழந்து கஷ்டப்பட்டவன். ரொம்ப சிரமமான சூழ்நிலையிலதான் படிச்சேன். பத்தாவது, பிளஸ் 2 பொது தேர்வுகள்ல மிகவும் குறைவான மதிப்பெண்கள்தான் பெற்றேன். ஆனாலும் நம்பிக்கை இழக்கலை. தன்னம்பிக்கையோடு போராடி என்னை மேம்படுத்திக்கிட்டதால, இன்னைக்கு ஒரு நல்ல நிலையில இருக்கேன். இதுமாதிரி இன்னும் பல உதாரணங்களை சொல்லிக்கிட்டே போகலாம்.
தேர்வுல குறைவான மதிப்பெண்கள் எடுக்குற மாணவர்கள், தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனம் தளர்ந்து, தற்கொலை போன்ற தவறான முடிவுகளுக்கு செல்வது சமீபகாலமாக அதிகரிச்சிக்கிட்டே இருக்கு. தேர்வு முடிவு என்பது வாழ்க்கையை தீர்மானிக்கிற முடிவல்ல. தேர்வுகள்ல தோல்வி அடைஞ்சவங்களும் கூட, பெரிய சாதனையாளர்களாக உருவாகி இருக்காங்க. விடாமுயற்சி, தன்னம்பிக்கையோடு வாழ்ந்து, படிப்புல உங்கக்கிட்ட உள்ள குறைகளை சரிசெஞ்சு மேம்படுத்திக்கிட்டா நீங்களும் சாதிக்கலாம்...'' என நம்பிக்கை விதைக்கிறார் ஆசிரியர் ஆனந்த்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.