தமிழக அரசு நடத்திவரும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 37 சதவிகிதம் உயர்ந்துள்ளது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விமசிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தேர்தல் பார்வையாளர்கள் விசாரணை நடத்த தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி," பத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் சென்று பிரசாரம் செய்தால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்படும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், 19ம் தேதிக்குப் பிறகுதான் திருப்பிக் கொடுக்கப்படும்.வரும் 14ம் தேதி மாலை ஆறு மணிக்கு, அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும்." என்றார்.
மேலும் அவர் கூறுகையில்,"டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 37% அதிகரித்த விவகாரம் தொடர்பாக, தேர்தல் பார்வையாளர்கள் விசாரணை நடத்தி தகவல் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக, தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், காவல்துறை தலைவர், வருமானவரித்துறை ஆணையர் உள்ளிட்டோருடன் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, வீடியோ கான்பரன்சிங் மூலம் நாளை ஆலோசனை நடத்தவிருக்கிறார்" எனவும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.