Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 17, 2016

பூச்சிகளால் அசுத்தமாகும் தாஜ்மஹால்: மத்திய, உ.பி. அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்


யமுனையாற்றில் கொட்டப்படும் கழிவுகளில் இருந்து உற்பத்தியாகும் பூச்சிகளால், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் கட்டடம் அசுத்தமாவது தொடர்பாக மத்திய அரசுக்கும், உ.பி. அரசுக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் டி.கே.ஜோஷி என்பவர், பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

தாஜ்மஹால் அருகே யமுனையாற்றில் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனால், ஆற்றுநீர் மாசடைந்து, அதிலிருந்து "சிரோனாமஸ் காலிகிராபஸ்' எனப்படும் ஒரு வகை பூச்சிகள் பெருமளவில் உற்பத்தியாகின்றன.

இந்த பூச்சிகள் பறந்து, தாஜ்மஹால் கட்டடங்கள் மீது அமருகின்றன. அந்த பூச்சிகளின் கழிவுகளால் தாஜ்மஹாலின் வெள்ளை சலவைக் கற்கள் மீது கறுப்பு நிறக் கறை படிகிறது.

இதுகுறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், "சிரோனாமஸ் காலிகிராபஸ்' பூச்சிகளால் தாஜ்மஹால் கட்டடத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக கண்டறிப்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

அந்த மனு மீதான விசாரணை, தீர்ப்பாயத் தலைவரும், நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகம், உத்தரப் பிரதேச அரசு, உத்தரப் பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப தீர்ப்பாய அமர்வு உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.