Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 24, 2016

நிறம் மாறும் தாஜ் மஹால்: ஆய்விற்கு உத்தரவிட்டது உத்தரப்பிரதேச அரசு


உலக பாரம்பரிய நினைவுச்சின்னமான தாஜ் மஹாலின் நிறம் மாறி வருவதாக வந்த அறிக்கைகளின் அடிப்படையில் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆய்விற்கு உத்தரவிட்டுள்ளார்.

பூச்சிகளளின் தாக்குதலால் தாஜ் மஹாலின் நிறம் பச்சையாக மாறி வருவதாக சில அறிக்கைகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து அகிலேஷ் யாதவ் தாஜ் மஹாலின் “இயற்கை அழகு” பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

உத்தர பிரதேச பொதுப்பணித் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தொல்பொருள் துறை ஆகியவற்றை சேர்ந்த மூத்த அதிகாரிகளுக்கு தாஜ் மஹாலை ஆய்வு செய்து, நிற மாற்றத்திற்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து அதற்கு விரைவான தீர்வு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுக்குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உ.பி. சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்திற்கு இந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.