Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 14, 2016

மொபைல்போனை விழுங்கிய வாலிபர் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கபட்டது


அமெரிக்காவின் டும்ளின் நகரில் செயல்பட்டு வரும் மனநலகாப்பகத்தில் இருந்த, 29 வயதான கைதி ஒருவர், சிறியரக மொபைல் போன் ஒன்றை  விழுங்கியுள்ளார்.

விழுங்கி 6 மணிநேரம் கடந்த பின்னர், அந்நபர் அங்கிருந்த ஊழியர்களிடம் நான் மொபைல்போனை  விழுங்கிவிட்டேன் என கூறியுள்ளார்.

மொபைல்போனை விழுங்கிய காரணத்தால், அந்நபருக்கு விடாப்பிடியாக வாந்தி வந்துகொண்டே இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைச்சென்றனர்.

எண்டோஸ்கோப் மூலம் ஒரு நீண்ட மெல்லிய நெகிழ்வான குழாயின் வழியாக ஒளி மற்றும் வீடியோ கமெராவினை பயன்படுத்தி பார்த்தபோது, உணவுக்குழாயின் வழியாக மொபைல்போன் வயிற்றுக்குள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

அதன் பின்னர் அவரது வயிற்றுப்பக்கவாட்டில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மொபைல்போனை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.

சிகிச்சை முடிந்து 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அக்கைதி தற்போது நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.