Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 10, 2016

எஸ்.வி.எஸ்., கல்லூரி மாணவர்கள் சென்னையில் முற்றுகை போராட்டம்


'அரசு உத்தரவிட்டும், தங்களை அரசு கல்லுாரிகளுக்கு மாற்றவில்லை' எனக் கூறி, எஸ்.வி.எஸ்., ஓமியோபதி கல்லுாரி மாணவர்கள், சென்னையில் உள்ள இயக்குனரகத்தை முற்றுகையிட்டனர்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, எஸ்.வி.எஸ்., யோகா, இயற்கை மருத்துவக் கல்லுாரியில், மூன்று மாணவியர் மர்மமான முறையில் இறந்தனர். இதையடுத்து, கல்லுாரி இழுத்து மூடப்பட்டது. கல்லுாரியில் பயின்று வந்த யோகா, இயற்கை மருத்துவ மாணவர்கள், அரசு உத்தரவில், சிறப்பு கலந்தாய்வு நடத்தி, சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, இயற்கை மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டனர்.

'ஓமியோபதி பிரிவு மாணவர்கள், மதுரை, திருமங்கலத்தில் உள்ள, அரசு ஓமியோபதி கல்லுாரியில் சேர்க்கப்படுவர்' என, அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை சேர்க்கவில்லை. அதிருப்தியடைந்த மாணவர்கள், நேற்று, சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.

பின், இயக்குனரக அதிகாரிகளைச் சந்தித்து, 'பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்கு பின், அடுத்த கலந்தாய்வு நடக்கும் முன், எங்களை அரசுக் கல்லுாரியில் சேர்க்க வேண்டும்' என வலியுறுத்தினர். 'விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்' என அதிகாரிகள் கூறியதால், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.