Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 3, 2016

வெயிலுக்கு குளுகுளு டிப்ஸ்


வெயில் காலம் வந்தாலே, பலருக்கு பாத எரிச்சல் வந்து விடும். குறிப்பாக நீரிழிவுக்காரர்களுக்கு!  2 டீஸ்பூன் சிவப்பு சந்தனத்துடன், சிறிது பன்னீரும், 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயும் கலந்து, பாதத்தில் தடவிக் கொண்டு, கால்களை சற்று உயர்த்தி வைத்தபடி ஓய்வெடுத்தால், சூடும் தணியும். பாத எரிச்சலும் பறந்து போகும்.
கொஞ்சம் ரோஜா இதழ்களை இளநீர் விட்டு மையாக அரைக்கவும். அதை முகம், கை, கழுத்துப் பகுதிகளில் தடவ, வெயிலினால் வறண்டு போன சருமம் பளபளப்பாகும். சரும துவாரங்களும் மூடும்.
நுங்குத் தண்ணீரை, காய்ச்சாத பாலில் கலந்து, முகம், கழுத்து, முதுகுப் பகுதிகளில் தடவி, சிறிது நேரம் ஊறிக் குளிக்க, குளுகுளுவென உணர்வீர்கள்.
‘அக்கி’ என்கிற கொப்புளம் வெயில் நாட்களில் சகஜம். கிராமங்களில் அக்கி வந்தால், உடனே காவியை எடுத்துத் தடவுவார்கள். காவி என்றால் கோலம் போட உபயோகிப்பது இல்லை. அக்கி காவி என்றே கடைகளில் கிடைக்கும். அதை விளக்கெண்ணெயில் குழைத்து, உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் தடவினால் அக்கி வராது. காவியின் நவீன வடிவம்தான் நாம் இன்று உபயோகிக்கிற கேலமைன் ஐபி லோஷன்.
ஆவாரம் பூவையும் கார்போக அரிசியையும் சம அளவு எடுத்துக் காய வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியில் 1 டீஸ்பூன் எடுத்து, அதில் பன்னீரும், காய்ச்சாத பாலும் கலந்து, முகத்திலும், கழுத்திலும் தடவி, அரை மணி நேரம் கழித்துக் கழுவினால், வெயில் பட்டுக் கருத்த இடங்கள் மாறும்.
எலுமிச்சம்பழ, ஆரஞ்சுப்பழத் தோல்களை வீணாக்காமல் சின்னச் சின்னதாக வெட்டி, வெயிலில் காய வைத்து, கொஞ்சம் கசகசா சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியில் பன்னீர் விட்டுக் குழைத்து, முகத்துக்குத் தடவினால், முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கும்.
தினமும் 2 வேளைக் குளியல் அவசியம். குளிக்கிற தண்ணீரில் 3 துளிகள் எலுமிச்சைச் சாறும், 3 துளிகள் ரோஸ் ஆயிலும் கலந்து குளித்தால், வியர்வை நாற்றம் இருக்காது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.