பிரசாரத்துக்காக சென்ற மல்லை சத்யாயும், மக்கள் நல கூட்டணியினரையும் பா.ம.க.வினர் ஆயுதங்களை காட்டி மிரட்டி உள்ளனர். இதுபோன்ற செயல்கள் நாட்டுக்கு நல்லதல்ல என்று ராமதாசுக்கும், அன்புமணிக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று வைகோ எச்சரித்துள்ளார்.
ம.தி.மு.க., தா.ம.க., மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் பிரசாரம் மேற்கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ''மதுவிலக்கு விவகாரத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மக்களை ஏமாற்றுகிறது. மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு தி.மு.க. ஆட்சியில் தான் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், மத்திய அரசு பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கடைபிடிக்கிறாது.
மக்கள் நல கூட்டணியால் மட்டுமே மதுக்கடைகளை நிரந்தரமாக மூட முடியும். மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் ரூ.30 ஆயிரம் கோடி இல்லாமல் எப்படி அரசை நடத்த முடியும் என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். தாதுமணல் கொள்ளை, ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளைகளை தடுப்பதன் மூலம் மட்டுமே அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். பத்திரப்பதிவு துறையை சீர்படுத்தினால் 15 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும்.
உங்களை சிலர் விலைகொடுத்து வாங்க முயல்கிறார்கள். அதுபோன்று முயலும் நபர்களுக்கு ஓட்டு போடாதீர்கள். இளைஞர்கள் தான் இந்த நாட்டின் எதிர்காலம். இளைஞர்கள் இந்த விவகாரத்தில் கவனமாக செயல்பட வேண்டும். விலைகொடுத்து ஓட்டுகளை வாங்க முயலும் கட்சிகளை புறந்தள்ளிவிட்டு மக்கள் நல கூட்டணிக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று பெற்றோர், உறவினர்களிடம் இளைஞர்கள் வலியுறுத்த வேண்டும்.
திருப்போரூர் தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் மல்லை சத்யா போட்டியிடுகிறார். அந்த தொகுதிக்கு உட்பட்ட கீரப்பாக்கம் பகுதியில் பிரசாரத்துக்காக சென்ற அவரையும், மக்கள் நல கூட்டணியினரையும் பா.ம.க.வினர் ஆயுதங்களை காட்டி உள்ளே வரக்கூடாது என்று மிரட்டி உள்ளனர். இதுபோன்ற செயல்கள் நாட்டுக்கு நல்லதல்ல என்று ராமதாசுக்கும், அன்புமணிக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். யார் கலவரத்தில் ஈடுபட்டாலும் ம.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அமைதி காக்க வேண்டும்.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாயும், தி.மு.க. ஆயிரம் ரூபாயும் கொடுக்க முடிவு செய்துள்ளன. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையத்தால் தடுக்கவே முடியாது. மக்களாக பார்த்து ஓட்டு போட்டால் தான் தமிழகம் தப்பிக்கும். இந்த தேர்தலில், ஒரு கோடியே 45 லட்சம் புதிய வாக்காளர்கள் மக்கள் நலக்கூட்டணிக்கு தான் வாக்ளிப்பார்கள். மேலும், இந்த தேர்தல் சரித்திரம் பேசும் வகையில் 150 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.