எனக்கு அப்பா இல்ல, அம்மாதான் செக்யூரிட்டி வேலை பார்த்து படிக்க வைக்கிறாங்க என அரசு பள்ளிகளின் அளவில் முதலிடம் பிடித்த மாணவி சரண்யா கூறியுள்ளார்.
12-ம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளிகளில் பயின்றவர்களில் மாநில அளவில் முதலிடம் பிடித்திருக்கிறார் காஞ்சிபுரம் அடுத்துள்ள ஏகனாம்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சரண்யா. தமிழில் 194, ஆங்கிலத்தில் 195, கணிதத்தில் 200, இயற்பியலில் 194, வேதியியலில் 200, உயிரியலில் 196 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இவர் எடுத்துள்ள மொத்த மதிப்பெண் 1179. காலையிலிருந்தே சுற்றமும் நட்பும் வாழ்த்துமழை பொழிந்து வருகின்றனர்.

“அப்பா இல்லை. அம்மாதான் எல்லாமே. தனியார் கம்பெனியில செக்யூரிட்டி வேலை செய்துதான் எங்களை படிக்க வைக்கறாங்க. பத்தாம் வகுப்பிலேயே மாநிலத்தில் முதலிடம் வரனும்னு நெனச்சு படிச்சேன். ஆனா 491 மார்க்தான் எடுக்க முடிந்தது. மாவட்ட அளவில்தான் முதலிடம் கிடைத்தது. அதனால், 12-ம் வகுப்பில் மாநிலத்தில் முதலிடம் வரனும்னு நெனச்சு படித்தேன். இப்போது, அரசு பள்ளி அளவில் முதலிடம் கிடைத்திருக்கிறது. டாக்டர் ஆகனும்ங்கறதுதான் என்னோட ஆசை.

ஆசிரியர்களும், தோழிகளும் என்னை உற்சாகப்படுத்தினார்கள். சனி ஞாயிறு விடுமுறையில் கூட எங்க ஆசிரியர்கள் எங்களுக்காக பாடம் எடுத்தாங்க. நவம்பர் மாசம் பெய்த மழையில் ஒரு மாதம் பள்ளிக்கூடம் பக்கமே போக முடியல. அந்த நேரத்தில் எங்க பகுதியில் உள்ள 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நானே டியூஷன் எடுத்தேன். எங்க பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி அடைந்ததை நினைத்தால் சந்தோஷமா இருக்கு“ என்கிறார் சரண்யா.
மற்றவர்களுக்காக நேரத்தை ஒதுக்கியும், அவரும் படித்தும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் சரண்யா.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.