Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 16, 2016

ஆசிரியரை வெட்டிய மாணவன்


வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தென்றல்நகரை சேர்ந்தவர் பாபு (52). திருப்பத்தூர் அருகே உள்ள அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இப்பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவன் ஒருவன், பாபுவிடம் டியூஷன் படித்து வருகிறான். ஆனால் டியூஷனில் சரியாக படிக்காததால் மாணவனை கண்டித்தார்.   நேற்று காலை அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பாபு வெளியே வந்தார். அப்போது, பாபுவுக்கு மாணவன் வணக்கம் தெரிவித்தான். அவர் பதிலுக்கு வணக்கம் தெரிவிக்க கையை தூக்கும்போது கத்தியால் கையை வெட்டினான். இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து மாணவனை பிடித்து திருப்பத்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.