Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 5, 2016

பிரசவ காலத்தில் வயிற்றில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும் முறைகள்


பெண்ணை தாயாக்கும் கர்ப்பம் உள்ளுக்குள் மகிழ்ச்சியை கொடுத்தாலும், உடல் ரீதியாக அந்த பெண்ணுக்கு பலவித சங்கடங்களையும் கொடுக்கிறது.

பெண்ணை தாயாக்கும் கர்ப்பம் உள்ளுக்குள் மகிழ்ச்சியை கொடுத்தாலும், உடல் ரீதியாக அந்த பெண்ணுக்கு பலவித சங்கடங்களையும் கொடுக்கிறது. ஆனால் இந்த கர்ப்ப காலத்திலும் சங்கடம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் காலமும் உண்டு.

ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை வெளியே சொன்னால் ஒழிய மூன்று மாதங்கள் வரை வயிற்றுப்பகுதியில் பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியாது. நான்காவது மாதத்தில்தான் வயிறு பெரிதாவது தெரியும். வயிற்றின் தசைகளும், தோலும் கருவின் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவடைகின்றன. ஒவ்வொரு மாதமும் இது அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

குழந்தை பிறந்த பின், தோல் மறுபடியும் சுருங்கத் தொடங்கும். வயிறு விரிந்து, சுருங்குவதால் குழந்தை பெற்ற பெண்களுக்கு அடி வயிற்றுப்பகுதியில் நரம்புகள் போல் கோடுகள் நிரந்தரமாக விழுவதுண்டு. கொஞ்சம் கவனமாக இருந்தால் இந்த வெள்ளை தழும்புகளை வரவிடாமல் தவிர்க்கலாம். கோகோ பட்டர், ஆலிவ் ஆயில் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை அடி வயிறு முழுக்க தடவி, அரை மணி நேரத்திற்குப் பின் குளித்தால் வயிற்றில் அதுபோன்ற கோடுகள் விழாது.



அதே போல் சமையலுக்கு பயன்படும் மஞ்சள்தூளை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து தடவலாம். வயிற்றில் எண்ணெய் தடவும் இந்த முறை வயிறு விரிவடையத்தொடங்கும் நான்காவது மாதத்தில் இருந்தே ஆரம்பித்து விடுவது நல்ல பலனை தரும். வயிறு போன்றே இந்த காலக்கட்டத்தில் சில பெண்களுக்கு மார்பகம் கூட சராசரி அளவை விட பெரிதாகி பின்னர் சிறிதாகும். இதனால் மார்பக பகுதிகளிலும் கூட இந்த வெள்ளைக்கோடுகள் தென்படத் தொடங்கும்.

அதற்கும் இதே வழியைப் பின்பற்றலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண் உடல் ரீதியாக தொல்லை இன்றி சந்தோஷமாக இருக்கும் காலக்கட்டமும் இந்த நான்காவது மாதம்தான். சாப்பிட முடியாமல் தலைச்சுற்றி மயக்கம் வருவதெல்லாம் முதல் 3 மாதங்களோடு சரியாகிவிடும்.

நான்காவது மாதத்தில் இருந்து ஓரளவுக்கு நன்கு சாப்பிட முடியும். ஊட்டமான சாப்பாடு, குழந்தை பெற்றுக்கொள்ளப்போகும் பூரிப்பு, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் குறையாத தன்மை ஆக இந்த 3 காரணங்களும் ஒன்றாக சேர நான்காவது மாதத்தில் இருந்து 6-வது மாதம் இறுதி வரை பெண்களின் முகம் பளிச்சென்று பூரிப்போடு பிரகாசிக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.