Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 30, 2016

கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு பறவைக் காய்ச்சல் பரவாமல் இருக்க தடுக்கும் பணி மும்முரம்


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆய்வு செய்தார்.

கர்நாடகா-தமிழக நுழைவு பகுதியான ஜூஜூவாடி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள நோய் தடுப்பு மையத்தில் ஆய்வு செய்த அமைச்சர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அ‌திகாரிகளிடம் கேட்டறிந்தார்.

எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் 24 மணி நேரமும் மின் விசை தெளிப்பான்கள் மூலம் மருந்து தெளிக்கவும் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி அறிவுறுத்தினார். கர்நாடக மாநிலத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சல், தமிழகத்தில் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.