Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 23, 2016

ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு


ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை பல்கலைகழகத்துக்கு வந்தடைந்தார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

தமிழக முதல்வராக, 6-வது முறையாக ஜெயலலிதா இன்று (திங்கள்கிழமை) பதவியேற்கிறார். அவருடன் 28 அமைச்சர்களுக்கும் ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடக்கும் பிரம்மாண்ட விழாவில், பகல் 12 மணிக்கு மேல் முதல்வராக ஜெயலலிதா மற்றும் 28 அமைச் சர்கள் பதவியேற்கின்றனர்.

இந்நிலையில், திமுக பொருளாளரும் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அவருடன், திமுக எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, சேகர்பாபு, வாகை.சந்திரசேகர், மா.சுப்பிரமணியம் ஆகியோரும் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக 98 எம்.எல்.ஏ.க்களுடன் திமுக கூட்டணி வலுவான எதிர்க்கட்சியாக இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வலுவான எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்படுவோம் என ஏற்கெனவே மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு ஸ்டாலின் ஆரோக்கியமான அரசியை முன்னெடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தா.பாண்டியன் பங்கேற்பு:

இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனும் முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.