Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 30, 2016

சத்தான முளைகட்டிய நவதானிய சுண்டல்


தேவையான பொருட்கள் :

வெள்ளை கொண்டைக்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை, காராமணி, பாசிப்பயிறு, கொள்ளு, மொச்சை, சிவப்பு சோயா, ராஜ்மா, காய்ந்த பட்டாணி (அனைத்தும் முளைகட்டியது) - தலா 4 டேபிள்ஸ்பூன் அல்லது சமஅளவு,

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
பெருங்காயத்தூள்

அரைக்க:

தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
இஞ்சி - சிறிய துண்டு.
சோம்பு - கால் டீஸ்பூன்,
பட்டை - சிறிய துண்டு,

செய்முறை:

* இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

* முளைகட்டிய தானியங்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் போட்டு 5 விசில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

* அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும்.

* வேகவைத்த தானியம், அரைத்த விழுது சேர்த்துக் கிளறவும்.

* பச்சை வாசனை போனதும், (விருப்பப்பட்டால்) தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கினால் சுவையான நவதானிய சுண்டல் ரெடி. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.