Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 6, 2016

'அச்சச்சோ..!' தமிழக இளைஞர்களுக்காக வருத்தப்படுகிறார் சோனியா!



அ.தி.மு.க. ஆட்சியில், தமிழகத்தில் நாளுக்கு நாள் பல தொழிற்சாலைகள் மூடப்படுவதால், இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர் என்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டினார்.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் சென்னை தீவுத் திடலில் நடைபெற்றது. இதில், தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொண்டனர்.

தி.மு.க., காங்கிரஸ் கூட்டனி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து உரையாற்றிய சோனியாகாந்தி, ''தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தின் காரணமாக மக்கள் பலர் உயிரையும், உடமைகளையும் இழந்தனர். சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகினர். இந்தக் கொடுமையான சூழலைத் திறம்பட எதிர்கொண்ட மக்களன் தைரியத்தைப் பாராட்டுகிறேன்.



வெள்ள பாதிப்பின்போது, மக்களுக்கு மக்களே உதவிக் கொள்ளக்கூடிய நிலைதான் இருந்தது. அந்த நேரத்தில் அ.தி.மு.க. அரசு எங்கே போயிற்று என்றே தெரியவில்லை. மக்களின் கண்ணீரைத் துடைக்கவோ, மக்களுக்கு உதவிக்கரம் நீட்டவோ அ.தி.மு.க. அரசு முன்வரவில்லை.

மழை வெள்ள பாதிப்புக்குப் பிறகு இப்போது தமிழகத்தில் வறட்சி நிலவுகிறது. விவசாய நிலங்கள் காய்ந்து கிடக்கின்றன. மக்கள் குடிநீருக்காக தவிக்கும் நிலை உள்ளது.  இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாண மத்திய அரசும், மாநில அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, புதிய புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டன. ஆனால், தற்போதோ தொழிற்சாலைகள் நாளுக்கு நாள் மூடப்படுகின்றன. தொழில்முனைவோர்கள் வேறு மாநிலங்களுக்கு தொழில் தொடங்க செல்கிறார்கள். தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர்.



காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி நிலம் கையகப்படுத்துவது தொடர்பான சட்டத்தை நிறைவேற்றியது. அதில் நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் ஒப்புதல் தேவை என்ற அம்சம் இடம்பெற்றிருந்தது. ஆனால் அ.தி.மு.க. அரசு நிலப் கையகப்படுத்துவது தொடர்பான சட்டத்தை மாற்றி, அரசே நிலத்தை எடுத்துக் கொள்ளலாம் என திருத்தம் மேற்கொண்டது. விவசாயிகளுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி வழங்கிய மிகப் பெரிய நன்மையை அ.தி.மு.க. அரசு பறித்துக் கொண்டது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு சமூக நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துள்ளது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பெண்கள், குழந்தைகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. இதனை நாடாளுமன்றத்தில் அதிமுக எதிர்க்காமல், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், மாநிலத்தில் கூட்டணியில் இருந்தாலும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக நாங்கள் தொடர்ந்து பாடுபட்டு வந்துள்ளோம். எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம். பிற கட்சிகளைப் போல பொய் வாக்குறுதிகளைத் தர மாட்டோம். தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக மாற்றிக் காட்டுவோம்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.