Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 2, 2016

திருமணம் செய்து வைக்காததால் தாயை படுகொலை; செய்த மகன் கைது: கத்தியால் குத்தி, தீவைத்த கொடூரம்


அரும்பாக்கம் அருகே திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தாயை கத்தியால் குத்தி, தீ வைத்து எரித்து, படுகொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அரும்பாக்கம் துரைசாமி காலனி மாங்காலி நகரை சேர்ந்தவர் சசிகலா (63). தனியார் பள்ளியில் ஆயாவாக பணியாற்றி வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள். 2வது மகன் ஆனந்த். திருமணமாகி அதே பகுதியில் குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். மூத்த மகன் அமர்நாத் பிரசாத் (40), டாக்சி டிரைவர். குடிப்பழக்கம் உடைய இவருக்கு திருமணம் ஆகாததால், தாயுடன் வசித்து வருகிறார். தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி சசிகலாவிடம் அடிக்கடி அமர்நாத் தகராறு செய்வது வழக்கம் என தெரிகிறது. வழக்கம்போல், நேற்றும் தாய் சசிகலாவிடம் தகராறு செய்துள்ளார். அதற்கு சசிகலா, ‘‘எனக்கு உடல்நிலை சரியில்லை. சரி செய்து கொண்டு, உனக்கு பெண் பார்க்கிறேன். கொஞ்சம் பொறுத்திரு’’ என கூறி உள்ளார்.

இதில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த அமர்நாத் அருகில் கிடந்த கத்தியை எடுத்து தாயின் கழுத்தில் குத்தினார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சசிகலா உயிருக்கு போராடி உள்ளார். தாய் இறக்கவில்லை என்பதை உறுதி செய்த அமர்நாத், பிறகு மண்ணெண்ணெய் எடுத்து ஊற்றி அவரை கொளுத்தி விட்டு தாய் தீக்குளித்து விட்டதாக கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். சசிகலாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், ‘‘தனக்கு திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தாயை கொலை செய்து விட்டதாக’’ அமர்நாத் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.