50 ஆண்டுகால திமுக, அதிமுக ஆட்சிகளின் சாதனை என்பது சலுகை, மானியம், போனஸ், இலவசம் என்பதுதானே தவிர வேறு ஒன்றும் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ம.உஷா(எ)நிறைமதியை ஆதரித்து வாக்குச் சேகரித்து பிரசாரம் செய்த சீமான் இவ்வாறு கூறினார்.மேலும் அவர் பேசுகையில்,'மதுவை விற்று இலவசங்கள் வழங்கும் அதிமுக,திமுக ஆட்சிகள் கல்வியை இலவசமாக வழங்குமா? இலவசங்கள் வழங்கியதை சாதனை என்று கூறும் முதல்வர் ஜெயலலிதா,கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மது குடித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சம் பேர்.இது சாதனையா வேதனையா? அதை யார் சொல்லுவது.
நாட்டில்,கல்வி,மருத்துவம்,போக்குவரத்து,மின்சாரம் என்று அனைத்தும் தனியார் மயம்.அப்படி என்றால் எதுக்குத்தான் அரசு இருக்கிறது? என்றால் கமிஷன் வாங்கிக்கொண்டு 'கம்'னு இருப்பதற்குத்தான் அரசு.இங்கு முதல்வர்கள், பிரதமர்கள் அல்ல மக்கள் தேர்வு செய்வது. கமிஷன் பாய்ஸ்- ஐ தான் தேர்வு செய்கிறோம். அப்படி அனைத்துத் துறைகளிலும் கமிஷன் வாங்குகிறார்கள் அவர்கள்.எல்லாமே தனியார் வசம் என்றால் சாராய ஆலைகளையும், சாராய கடைகளையும் அரசு நடத்தும் என்றால் அந்த அரசு நமக்குத் தேவையா?' என்றார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.