Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 4, 2016

சரமாரியாக கத்தி குத்து பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி சாவு


6 பேர் கும்பலால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட பள்ளி மாணவன், சிகிச்சை பலனின்றி இறந்தார்.தென்கிழக்கு டெல்லி, மதன்கீர் பகுதியை சேர்ந்தவர் தீபு (18). அங்குள்ள அரசு பள்ளியில் 12ம் வகு ப்பு தேர்வு எழுதியுள்ளார்.இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென அலைபேசி அழைக்கவே வீட்டை விட்டு அவசரமாக கிளம்பியுள்ளார். சிறிது நேரத்தில் அவர் பதற்றத்துடன் வீட்டை நோக்கி ஓடிவந்தார். அப்போது அவரை 6 பேர் கொண்ட கும்பல் துரத்தி வந்து கொண்டிருந்தது. பின்னர் அந்த கும்பல் தீபுவை சுற்றி வளைத்து, கத்தியால் சரமாரியாக குத்தியது. இதில் தீபு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு வரவே, கொலை வெறி தாக்குதல் நடத்திய அக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. பொதுமக்கள் தீபுவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் டெல்லி போலீசார் வழக்கு பதிந்து, நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் தீபு படுகொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி, கொலையாளிகளை தேடி வருகின்றனர். பட்டபகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.