வாட்ஸ்அப்-க்கு தடை விதிக்கக்கோரி, கதிர் யாதவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களைப் போன்று வாட்ஸ் அப்பும் பலதரப்பட்ட மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆப்பில் பல்வேறு மாற்றங்களை சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் செய்திருந்தது. அதன்படி, வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் தகவல்களை அனுப்புவோரும், பெறுவோரும் மட்டுமே பார்க்க, படிக்க முடியும் எனவும், நடுவில் வாட்ஸ் அப் நிறுவனமோ மற்ற யாருமோ பார்க்க முடியாது எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வாட்ஸ் அப்பிற்கு தடை விதிக்கக்கோரி தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் கதிர் யாதவ் உச்ச நீதிமன்றம் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ''வாட்ஸ் அப்பின் புதிய வசதி தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். எனவே, அந்த ஆப்பிற்கு தடை விதிக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.