Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 17, 2016

சென்னையில் 57% வாக்குப்பதிவு தானா? - ஆர்.ஜே.பாலாஜி காட்டம்


சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னையில் 57 சதவீதம் வாக்குப்பதிவே நடந்திருப்பது குறித்து ஆர்.ஜே.பாலாஜி தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் சென்னையில் 57 சதவீதம் தான் வாக்குப் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

சென்னையில் மிகவும் கம்மியாக வாக்குப்பதிவு அடைந்தது குறித்து ”சென்னையில் 57 சதவீதம் தானா. அட போங்கடா டேய். தமிழ்நாட்டில் 100 சதவீத வாக்குபதிவுக்காக செய்யப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரமும், அதற்கான உழைப்பும் எல்லாம் வீண். மீதமுள்ள 43 சதவீத மக்களின் ஆன்மா சாந்திடையவதாக" என்று காட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் 100 சதவீத வாக்குப்பதிவு கொண்டு வர வேண்டும் என்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள், வீடியோக்கள் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டவர் ஆர்.ஜே.பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.