ஆயிரம் ரூபாய் நோட்டின் இரண்டு பக்கங்களிலும், எண்களுக்கான பகுதியில் ‘ஆர்' என்ற எழுத்து பதியப் பெற்ற புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிடவுள்ளது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா.
இந்தப் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டில் வழக்கம்போல, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கவர்னர் ரகுராம் ராஜனின் கையெழுத்து இடம் பெற்றிருக்கும். கூடவே 2016 (வருடம்) என்பது வலமிருந்து இடமாக அச்சிடப் பட்டிருக்கும்.
இது தவிர வழக்கம்போல மற்ற ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் இருப்பது போன்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இந்த புதிய நோட்டுகளிலும் இடம் பெற்றிருக்கும்.
இந்தப் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்களானது, ஏறக்குறையை கடந்த 2005ம் ஆண்டு வெளியான மகாத்மா காந்தி வரிசை நோட்டுகளை ஒத்திருக்கும் என ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தாலும் கூட, மற்ற பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் வழக்கம்போல புழக்கத்தில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.