Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 30, 2016

சத்தான கோதுமை ரவை பொங்கல் செய்முறை விளக்கம்


தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை - ஒரு கப்,
வேக வைத்த பாசிப்பருப்பு - கால் கப்,
மிளகு (ஒன்று இரண்டாக உடைத்தது) - அரை டேபிள்ஸ்பூன்,
சீரகம் - அரை டேபிள்ஸ்பூன்,
வறுத்த முந்திரி - 8,
பட்டாணி - 1 டேபிள்ஸ்பூன்,
கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
நெய் - 4 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி - ஒரு துண்டு
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

* இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் கொஞ்சம் நெய் விட்டு கோதுமை ரவையை வறுத்து, தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

* அதனுடன் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும்.

* இன்னொரு கடாயில் சிறிது நெய் விட்டு... சீரகம், மிளகு போட்டு வறுக்கவும்.

* பிறகு அதில் பட்டாணி, இஞ்சி, கேரட் துருவல், முந்திரிப் பருப்பு போட்டு வதக்கி, கோதுமை கலவையில் கலந்து, மீதமுள்ள நெய் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

* சுவையான சத்தான கோதுமை ரவை பொங்கல் ரெடி.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.