Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 22, 2016

ஃபீனிக்ஸ் பறவைகளாய் உயிர்த்தெழுவோம்! - மாற்றம் 2.0 அன்புமணி


தமிழ்நாடு 2016 சட்டமன்றத் தேர்தலில் பாமகவிற்கு கிடைத்த முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி, 'திராவிடம் மூட்டிய தீயில் இருந்து இன்னும் அசுர பலத்துடன் உயிர்த்தெழுவோம், ஃபீனிக்ஸ் பறவைகளாய்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அன்புமணி தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,

"தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்கான விதையை ஆழமாக ஊன்றி, புதியதொரு வரலாற்றை தொடங்கிவிட்டோம்.
23 லட்சம் மக்கள் இன்று நம்முடன் அணி வகுத்து நிற்கின்றனர் மாற்றம் எனும் அந்த விருட்சத்தை வளர்த்தெடுக்க.
தடைகளை உடைத்து பல சரித்திரம் படைக்கும், என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!, இன்னும் அதிகமாய் படை எடுப்போம், இன்னும் வேகமாய் பணி முடிப்போம்.
சனநாயகத்தை அழிக்க திராவிடம் மூட்டிய தீயில் இருந்து இன்னும் அசுர பலத்துடன் உயிர்த்தெழுவோம், ஃபீனிக்ஸ் பறவைகளாய்!!
வருங்காலம் நமதே என்று சூளுரைப்போம்!
கலங்காது பணி செய்ய சபதம் ஏற்போம்!
வெற்றியை அடையும் வரை,
ஓய்வுக்கு கொடுப்போம் விடை! " என்று கூறியுள்ளார்.

ஒரு வேட்பாளர் கூட வெற்றி பெறாமல் போனாலும்,படு தோல்வியைச் சந்தித்துள்ள போதிலும், பாமகவின் வேட்பாளர்கள் 23 லட்சத்து 775 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.அதிமுக,திமுக,காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்த நிலையில்  5.3% வாக்கு வங்கி உள்ள கட்சியாக 2016 சட்டமன்றத் தேர்தலில்  பாமக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.