Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 13, 2016

'ரகுராம் ராஜனால வட்டி ஏறுது... அவரை நீக்குங்கோ!' - சிடுசிடு சுப்பிரமணியன் சுவாமி!


ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நடவடிக்கையால் வட்டி விகிதம் ஏறுகிறது. எனவே, அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் பா.ஜ.க.வின் மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர், நாடாளுமன்றத்திலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு, அதற்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நமது நாட்டிற்கு சரியானவர் கிடையாது. அவருடைய நடவடிக்கைகள் வட்டி விகிதத்தை ஏற்றுவதாக இருக்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும் அவர் எடுத்த நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

என்னுடைய கருத்து என்னவென்றால், ரகுராம் ராஜனை, இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் நீக்க வேண்டும்'' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.