புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார்.
மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண் பேடியை நியமித்துள்ளதாக தெரிகிறது.
இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும் ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேயின் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றவருமான கிரண் பேடி 2 ஆண்டுகளுக்கு முன்பாக பாஜக-வில் சேர்ந்தார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வின் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்டு படுதோல்வி கண்டார்.
புதுச்சேரிகென்று பிரத்யேகமாக துணைநிலை ஆளுநர் இதுவரை நியமிக்கப்படவில்லை, அந்தமான் நிகோபார் துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
இந்நிலையில் புதுச்சேரியில் 17 இடங்கள் வெற்றியுடன் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் துணைநிலை ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
ஏற்கெனவே டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் கடும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் தற்போது கிரண் பேடியை புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமித்துள்ளது புதுச்சேரியில் அமையவிருக்கும் புதிய ஆட்சியில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போகப் போகவே தெரியும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.