Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 3, 2016

கர்ப்பிணி பெண்ணை தாக்கி சிசுவை வெட்டி எடுத்த பெண்ணுக்கு 100 ஆண்டு சிறை


அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தைச் சேர்ந்தவர் மிச்செல் வில்கின்ஸ் (26)  இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு 7 மாத கர்ப்பிணியாக இருந்த போது 35 வயதான டைனல் லேன் என்ற பெண்,மிச்செல்லிடம் தகராறில் ஈடுபட்டு   அவரை தாக்கி  உள்ளார்.
கோபத்தில் தாக்கியதோடு மட்டுமல்லாமல் கருவில் இருந்த சிசுவை வெட்டி  வெளியே எடுத்துள்ளார்.இதில் பயந்து போன மெச்செல் வீட்டின் அடித்தளத்தில் சென்று கொண்டு கதவை மூடி ஒளிந்து கொண்டார். மேலும் போலீசாருக்கு போன் செய்த அவர், நடந்தவற்றை கூறியதோடு, தனது ரத்தப் போக்கை நிறுத்த முயன்றுள்ளார்.ஆனால் முடியவில்லை. பின்னர்  மிச்செல்  மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார் அங்கு அதிர்ஷ்டவசமாக வில்கின்ஸ் பிழைத்து கொண்டார்.
 இந்த நிலையில் மெச்செல்லை தாக்கிய லேன் தனது காதலரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் சம்பவத்தன்று, வில்கின்ஸை தாக்கி அவரது கருவில் இருந்த சிசுவை வெளியே எடுத்துள்ளார். அப்போது அவரது காதலர் வீட்டுக்கு வந்துள்ளார். அவரிடம் அங்கிருந்த ரத்தக்கறை தன்னுடையது என்றும் தனது கரு கலைந்துவிட்டது எனவும் லேன் பொய் சொல்லியுள்ளார்.
இந்த வழக்கில், கடந்த பிப்ரவரியில் லேன் மீது கொலை குற்றம் உறுதியாகி வழக்கு நடந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று  இந்த வழக்கில் அவர் மீது சட்ட விரோதமாக கர்ப்பத்தை கலைத்தது உள்ளிட்ட குற்றம் சுமத்தப்பட்டு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 பாதிக்கப்பட்ட வில்கின்ஸ், லேனிடம் நீதிமன்றத்தில் கூறுகையில், நீ என் சிசுவை கொன்று என்னை வேண்டுமென்றே பல முறை இறக்க வைத்துள்ளாய். மேலும், நீ நமது சமூகத்தில் வாழும் தகுதியை இழந்துவிட்டாய். எனவே நீ அதிகப்பட்ச தண்டனை பெற வேண்டும் என விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.