Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 19, 2016

சுவையான இறால் வடை செய்வது எப்படி


தேவையான பொருள்கள் :

இறால் - 100 கிராம்
உடைத்த கடலை - ஓரு கப்
கடலை மாவு - அரை கப்
வெங்காயம் - பெரியது 1
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 6  பல்
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
சோம்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* இறாலை உரித்துக் சுத்தம் செய்து உப்பையும், மஞ்சள் பொடியையும் கலந்து தண்ணீரில் வேகவைத்து ஆறியதும் அரைத்துக் கொள்ளவும்.

* வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும்.

* உடைத்த கடலையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

* இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை அம்மியில் நசுக்கிக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வேகவைத்து அரைத்த இறால், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கி வைத்துள்ள மசாலா,  அரைத்த உடைத்த கடலை, கடலை மாவு, உப்பு, மஞ்சள் பொடி, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாகப் பிசையவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

* அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, எண்ணெய் விட்டுக் கொதித்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும்வரை பொரித்து எடுக்கவும்..

* சுவையான இறால் வடை தயார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.