காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் 89 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த நிலையில், காட்டுமன்னார்கோவிலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணக் கோரி தேர்தல் ஆணையத்தை தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதிக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில், "கடந்த 19.05.2016 அன்று நடைபெற்ற காட்டுமன்னார்கோயில் தொகுதி 6வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது களியமலை கிராமத்தில் வாக்குசாவடி எண் 81ல் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது (இயந்திரம் எண்-L14732). வேட்பாளர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கையை அந்த இயந்திரம் காட்டவில்லை. 16.05.2016 அன்று நடைபெற்ற வாக்குப்பதிவின் போதும் அந்த வாக்குபதிவு இயந்திரம் இயங்காததால் வாக்குப்பதிவு தாமதமாக நடந்திருக்கிறது.
பழுதான இயந்திரத்திற்கு விடை தெரியாமல் வாக்கு எண்ணிக்கையை தொடரக்கூடாது என எமது கட்சி பொறுப்பாளர்கள் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர். தேர்தல் அதிகாரி அந்த பழுதான இயந்திரத்திலிருந்து காகிதத்தில் அச்சு எடுத்து வாக்கு எண்ணிக்கையை காட்டியுள்ளார். வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானால் அந்த குறிப்பிட்ட வாக்குசாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடாமல், பழுதான இயந்திரத்திலிருந்து வெளியான அச்சுபிரதியை தேர்தல் அதிகாரி எப்படி ஏற்றுக்கொண்டார்? அதை பதிவான மொத்த வாக்குகளில் எப்படி சேர்த்தார்?
101 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார். தேர்தல் அதிகாரி தனது கடமையை சரியாக செய்திருந்தால் போட்டியிட்ட வேட்பாளர்களை விட நான் அதிக வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றிருப்பேன். தேர்தல் அதிகாரிக்கான கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி மறுவாக்கு எண்ணிகையை தேர்தல் அதிகாரி நடத்தி இருக்கலாம். மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்ற எமது கோரிக்கையை தேர்தல் அதிகாரி உள்நோக்கத்துடனே புறந்தள்ளியதாக தெரிகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காட்டுமன்னார்கோயில் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமெனவும், களியமலை கிராமத்தில் வாக்குசாவடி எண்:81ல் வாக்குப்பதிவு இயந்திரம் எண்-L14732 பழுதானதால் தேர்தல் அதிகாரிக்கான கையேட்டில் உள்ளபடி அந்த வாக்குசாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்திட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல் தோல்வி தற்காலிகமான பின்னடைவு என்று திருமாவளவன் கூறியிருந்த நிலையில் தற்போது, காட்டுமன்னார்கோவிலில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.