Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 18, 2016

தேர்தல் முடிவுகளை வெளியிடத் தடை?: அவசர வழக்காக விசாரிக்கிறது நீதிமன்றம்


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை வெளியிடத் தடை கோரி தொடரப்பட்ட வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளைத் தவிர 232 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நேற்று நடந்தது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மற்றும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க உயர் நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து தேர்தல் முடிவை வெளியிடத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பிற்பகலில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.