Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 9, 2016

ஓபிஎஸ்-ஐ தோற்கடிக்க துண்டுபிரசுரம் காெடுத்தவரைத் தாக்கிய போலீஸ்!


'ஓ.பன்னீர் செல்வத்தை தாேற்கடிக்க வேண்டும் ஏன்?' என்ற வாசகத்துடன் துண்டறிக்கையை விநியோகித்த தமிழ்நாடு இயற்கை வள பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகிலனை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதால் போடி தொகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

இயற்கை வளங்களை பாதுகாக்கவும், சுற்றுச்சுழலை பாதுகாக்கவும், ஊழலை ஒழிக்கவும் செயல்படும் பல்வேறு அமைப்புகள் இணைந்து இயற்கை வன பாதுகாப்பு கூட்டமைப்பு அண்மையில் உருவாகியது. அப்போது, கடந்த 5 ஆண்டுகளில் இயற்கை வளங்களை அழித்து, சுற்றுச்சுழலை மாசுபடுத்த துணை நின்ற அரசியல்வாதிகளை சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், நியூட்ரினோ திட்டத்திற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்தும், தமிழகம் முழுவதும் ஆற்றுமணல் கொள்ளைக்கு காரணமாக இருக்கும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை தோற்கடிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.



அதன்படி, முகிலன் தலைமையில் மதுரை நாணல் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த 20 பேருடன் நேற்று போடி தொகுதிக்கு உட்பட்ட தேனி பழைய, புதிய பேருந்து நிலையம், தேனி கடைத்தெருக்களில் ஓபிஎஸ்-க்கு எதிரான துண்டறிக்கையை மக்களிடம் விநியோகித்தார். அப்போது, பொட்டிபுரம் பகுதிக்கு செல்ல காத்திருந்தபோது, அங்கு வந்த போடி காவல்துறை ஆய்வாளர் பா.சேகர், தலைமை காவலர் ஆகியோர் சேர்ந்து முகிலனை ஆபாச வார்த்தைகளால் வசைபாடி சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பொதுமக்கள் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றது. வேதனை தாங்க முடியாமல் முகிலன் அந்த இடத்திலேயே அமர்ந்து விட்டார். இந்த நிலையில், முகிலன் உள்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனிடையே, காவல்துறை ஆய்வாளர் சேகர், தலைமை காவலர் மற்றும் இவர்களை தூண்டி விட்ட அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தோனி மாவட்ட ஆட்சியரிடம் முகிலன் மனு கொடுத்ததோடு, அலுவலக வளாகத்திலேயே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சமூக அக்கறையோடு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இயற்கை வள பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.