விபத்தில் மூளைச்சாவு அடைந்து 3 பேருக்கு மறுவாழ்வு அளித்த மாணவி சி.பி.எஸ்.இ. தேர்வில் சாதனை படைத்து இருக்கிறார்.
சி.பி.எஸ்.இ. மாணவி
தானேயை சேர்ந்தவர் சியாம்காந்த். இவரது மகள் கெஜல் (வயது16). இவர் அங்குள்ள ஒரு சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கெஜல் படிப்பு மட்டுமின்றி விளையாட்டு, நடனம் மற்றும் பிற துறைகளிலும் சிறந்த மாணவியாக விளங்கினார்.
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி இருந்த மாணவி கெஜல் கடந்த மாதம் தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்த போது, துரதிருஷ்டவசமாக விபத்தில் சிக்கினார். கார் ஒன்று இடித்து தள்ளியதில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த கெஜல் ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்தார்.
தேர்வில் சாதனை
இதை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன் வந்தனர். இதன் காரணமாக கெஜலின் சிறுநீரகங்கள், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன. இதன் மூலம் மும்ராவை சேர்ந்த 14 வயது சிறுவன் உள்பட 3 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
இந்தநிலையில், நேற்றுமுன்தினம் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. அதில், கெஜல் சராசரி தர புள்ளி (சி.ஜி.பி.ஏ.) 8.6 பெற்று தேர்ச்சி அடைந்து இருந்தார்.
பெற்றோர் வருத்தம்
ஆனால் இந்த சாதனையை கொண்டாடி மகிழ்வதற்கு கெஜல் உயிரோடு இல்லையே என அவரது பெற்றோர் மிகுந்த சோகத்துடன் உள்ளனர். மாணவி கெஜலின் சாதனை பற்றி அவரது தந்தை கூறுகையில், கெஜல் பட்டய கணக்கர் (சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்) ஆக விரும்பினார். ஆனால் அது நடைபெறாமல் போய் விட்டது என்று வேதனை பட்டார்.
கெஜலின் பள்ளி முதல்வர் மாதிரி சந்திரசேகர் தெரிவிக்கையில், படிப்பு மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் கெஜல் பள்ளியில் சிறந்து விளங்கியவள். ஆசிரியர்கள் அனைவரையும் கவர்ந்த மாணவி கெஜல் என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.