Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 14, 2016

பீலா விடாதே!-சிறுகதை


ஒரு காட்டில் வசித்த கழுகும், ஆந்தையும் நண்பர்களாக இருந்தனர். இருவரும் ஊர் கதைகளை எல்லாம் பேசுவர்.
ஒருநாள்-
ஆந்தை கழுகிடம், ""கழுகாரே! என்னுடைய குழந்தைகளை நீ பார்த்திருக்கிறாயா? அவை மிகவும் அழகாக இருக்கும். அவற்றின் கண்களையும், இறக்கையையும் பார்க்க, பார்க்க மிகவும் அழகாக இருக்கும். நான் சொன்ன அடையாளங்களை வைத்தே என் குழந்தைகளை நீ அடையாளம் கண்டுகொள்ள முடியும்!'' என்று சொன்னது.
அதைக்கேட்ட கழுகும், ""அப்படியா?'' என்று வியந்தது. பிறகு இரண்டும் தனது இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றன.
ஒருநாள் கழுகு இரைதேடிச் சென்றபோது, மரப்பொந்து ஒன்றில் சில ஆந்தைக் குஞ்சுகளைப் பார்த்தது. பெரிய கண்களை பயங்கரமாக விழித்தப்படி இருந்த குஞ்சுகளைப் பார்த்த கழுகு, "இவை நிச்சயமாக எனது நண்பனின் குழந்தைகளாக இருக்க முடியாது!' என்று நினைத்து விட்டு<, அக்குஞ்சுகளைப் பிடித்துத் தின்றது.
அந்த நேரத்தில் கழுகின் நண்பனான, ஆந்தை அங்கு வந்து சேர்ந்தது. அது நடந்தவற்றைப் பார்த்து, ""துரோகியே! என் குழந்தைகளை இப்படிப் பிடித்து தின்று விட்டாயே! ஒரு நல்ல நண்பனின் செயல் இதுதானா?'' என்று வருந்தியபடி கேட்டது.
உடனே கழுகு ஆந்தையிடம், ""நண்பனே! உன் குழந்தைகள் மிகவும் அழகாக இருக்கும் என்றல்லவா என்னிடம் கூறினாய். இந்த அவலட்சணமான குஞ்சுகள் உன்னுடையதாக இருக்கும் என்று நான் நினைக்கவேயில்லை. நீ சொன்ன வீணான பொய்யால்தான் இப்படியெல்லாம் நிகழ்ந்துவிட்டது!'' என்று திருப்பிச் சொன்னது.
"உண்மையை மறைத்து மிகைப்படுத்திச் சொன்ன பொய்யால் குஞ்சுகளை இழந்து விட்டோம்,' என்று ஆந்தையும் உணர்ந்தது. இதுக்குத்தான் உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும் என்பது.
 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.