Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 23, 2016

காய்ச்சலை குணமாக்கும் பங்கஜ முத்திரை


சப்பணம் இட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்துகொள்ள வேண்டும். பிறகு, நெஞ்சுக் குழிக்கு நேராக (அனாகத சக்கரத்துக்கு நேராக), கைவிரல்கள் உடலில் ஒட்டாத வண்ணம், ஒரு தாமரை மலர்ந்திருப்பதுபோன்று... அதாவது, இரண்டு கரங்களின் கட்டைவிரல்களும், சுண்டு விரல்களும் முழுமையாக ஒட்டியிருக்க, மற்ற விரல்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மலர்ச்சியாக விரித்துவைத்துக் கொள்ள வேண்டும்.

கண்களை மூடி 30 நிமிடங்கள் வரையிலும் மெளனமாக அமர்ந்திருக்கலாம். மன இறுக்கம் உள்ளவர்கள், தாமரை மொட்டு  மெள்ள இதழ் விரிப்பது போன்று, முதலில் கைகளைக் குவித்து வைத்து, பின்னர் மெது மெதுவாக விரல்களை விரிக்கவும். இவ்வாறு விரிக்க குறைந்தது 3 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம். இப்படி, பதினான்கு தடவைகள் செய்யவும். தினமும் அதிகாலை வேளையில் செய்து பயனடையலாம்.

பங்கஜ முத்திரையும் நம் மனதை மலரச் செய்யும்.  நாம் உலக போகங்களில் உழன்றாலும் ஒட்டியும் ஒட்டாமல் வாழும் வல்லமையைத் தரும். இதுவே ஞானத்தின் முதல் நிலை.

மனச் சலனம், வீண் கோபம், பதற்றம் ஆகியன நீங்கும். முகப் பொலிவும் தேகத்தில் தேஜஸும் ஏற்படும்.

தாமரையானது வெளியே குளிர்ச்சியையும் உள்ளே சிறு வெப்பத்தையும் தக்க வைத்திருக்கும் ஒர் அற்புத மலர். அதுபோல உடலைக் குளிர்ச்சியாக்கி, மனதில் தேவையான வெம்மையை தக்கவைத்து, ஆரோக்கியத்தைச் செம்மையாக்கும்.

மனம் தெளிவடைவதால் சிந்தனையும் வளமாகும், செயல்கள் சிறப்படையும். பிள்ளைகளுக்கு ஞாபக சக்தி வளரும், கல்வியில் மேன்மை பெறுவார்கள். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.