Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 7, 2016

பாம்பன் சாலை பாலத்தில் அதிர்வு: அதிகாரிகள் அதிர்ச்சி



1988ல் பயன்பாட்டிற்கு வந்த பாம்பன் தேசிய சாலை பாலத்தில், 5 ஆண்டுக்கு ஒருமுறை மராமத்து பணிகள் நடக்கின்றன. கடந்த 2014--15ல் ரூ. 18.56 கோடியில் நடந்த மராமத்து பணியின்போது பாலத்தில் உள்ள 420க்கும் மேலான இரும்பு பேரிங், துாணில் இருந்த விரிசல், தடுப்பு சுவர்கள், மின் விளக்குகள் மராமத்து செய்து புதுப்பிக்கப்பட்டன. இப்பணி முடிந்த ஓராண்டுக்குள் பாலம் நடுவில் ரோடு சிலாப்புகளை இணைக்கும் 'பிங்கர் ஜாய்ன்ட்' எனும் இரும்பு பிளேட்டுகள் மீது கனரக வாகனங்கள் செல்லும் போது, அதிர்வு எழுந்தது. இதனால் பயணிகள், வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய துணை இயக்குனர் கார்த்திகேயன், சிறப்பு தலைமை பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட
அதிகாரிகள் குழு நேற்று பாம்பன் பாலம் அடிப்பகுதிக்குள் சென்று கனரக வாகனங்கள்(40 டன்) செல்லும் போது ஏற்படும் அதிர்வுகளை 'ரீ பவுண்ட் ஹம்மர்' எனும் கருவியின் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது ஏற்பட்ட அதிர்வை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின் பேரிங், பிங்கர் ஜாய்ன்ட் இரும்பு பிளேட்டுகளை பார்வையிட்டு, அதனுள் இருந்த மணல், துாசிகளை அகற்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் அதிர்வு ஏற்படும் பகுதியில் வேறு வகையிலான 'பிங்கர் ஜாய்ன்ட்' பிளேட்டுகள் பொருத்தலாமா எனவும் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து தலைமை பொறியாளர் ராஜேந்திரன் கூறுகையில், “பாலம் மற்றும் பிங்கர் ஜாய்ன்ட் பிளேட்டுகள் உறுதியாகதான் உள்ளது. தற்போது நடப்பது வழக்கமான ஆய்வு தான். சேதமடைந்த சாலையில் தார், ரசாயனம் கலந்து சீரமைக்க உள்ளோம். பாலத்தில் நிறுத்தும் வாகனங்களால் மணல், கழிவு பொருள்கள் இரும்பு பிளேட்டுகளுக்குள் சிக்குகிறது.
வாகனங்களை வெளியே நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.