பாக்ஸ்கான் நிறுவனத்தில் மனிதனுக்கு பதில் ரோபாட்: 60 ஆயிரம் ஊழியர் பணி நீக்கம்.
பாக்ஸ்கான் நிறுவனத்தில் மனிதனுக்கு பதில் ரோபாட்களை பயன்படுத்த உள்ளதால் 60 ஆயிரம் ஊழியர்யர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகில் முன்னணி எலக்ட்ரானிக் நிறுவனமாக பாக்ஸ்கான் நிறுவனம் உள்ளது. தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் கிளைகள் இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ளன.
பல்வேறு முன்னணி எலக்ட்ரானிக் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை பாக்ஸ்கான் நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது.
ஆப்பிள் சாம்சங் போன்ற நிறுவனங்களுக்கும் பாக்ஸ்கான்தான் உதிரி பாகங்களை சப்ளை செய்கிறது.
பாக்ஸ்கான் நிறுவனங்களில் உலகம் முழுவதும் 13 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். மனிதர்களுக்கு பதிலாக ரோபாட்டுகளை பயன்படுத்தும் திட்டங்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் படிப்படியாக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. முதலாவதாக சீனாவில் உள்ள இந்த நிறுவனங்களில் ரோபாட்டுகளை அறிமுகப்படுத்தி உள்ளனர். அங்குள்ள நிறுவனங்களில் 1 லட்சத்து 10 ஆயிரம் ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ரோபாட்டுகளை பயன்படுத்துவதால் இவர்களில் 60 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்கின்றனர். இதற்கு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் பொருளாதார அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எந்திரங்களை பயன்படுத்தி மனிதனின் வேலைகளை பறித்தால் அது வேறு வித பின்விளைவுகளை உருவாக்கும் என எச்சரித்து உள்ளனர்.
தொழிற்சாலைகளில் ரோபாட்டுகளை பயன்படுத்து வதன் மூலம் அடுத்த 20 ஆண்டில் 35 சதவீத ஊழியர்கள் உலகம் முழுவதும் வேலை இழப்பார்கள் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.