'கிஷ்கிந்தா' பொழுது போக்கு பூங்காவில் நடந்த ராட்டின விபத்தில், காயமடைந்தவர்களில் ஒருவர், நேற்று இறந்தார்.காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அடுத்த, எறையூர் பகுதியில் இந்த பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. கடந்த, 11ம் தேதி இரவு இங்கு, புதிய ராட்டினத்தை, பூங்கா நிர்வாகம் பரிசோதனை செய்தது.அப்போது, எதிர்பாராத விதமாக ராட்டின கம்பி அறுந்து விழுந்து, நல்லுார் கிராமத்தைச் சேர்ந்த, 'வெல்டர்' மணிகண்டன், 19, என்பவர் இறந்தார்; ஒன்பது பேர், தாம்பரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
சிகிச்சை பெற்று வந்த, மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவைச் சேர்ந்த சர்புதீன், 32, என்பவர் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை, இரண்டாக உயர்ந்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்த, மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவைச் சேர்ந்த சர்புதீன், 32, என்பவர் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை, இரண்டாக உயர்ந்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.