நெல்லை மாவட்டம் தென்காசியில் ஒரு வாக்குச்சாவடியில் இன்று (புதன்கிழமை) மறு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
தென்காசியில் ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. 232 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் வாக்கு எண்ணிக்கை நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது.
இந்த நிலையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கையும் வாக்குப்பதிவு செய்ய வரும் வாக்காளர்களை கணக்கிடும் விவரங்கள் படிவம் 17.ஏ-ல் பதிவு செய்யப்படும். அவற்றை சரி செய்யும் பணி அனைத்து தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வித்தியாசம் இருந்தால் அந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி சரிபார்க்கப்பட்டதில் நெல்லை மாவட்டம் தென்காசி தொகுதிக்குட்பட்ட 56-வது எண் வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்காசியில், 56-வது வாக்குச் சாவடியில், 52 ஓட்டுகள் கூடுதலாக பதிவாகியுள்ளது. அந்த சாவடியில், 486 ஆண் வாக்காளர்களும், 486 பெண் வாக்காளர்களும் உள்ளனர். 644 ஓட்டுகள் பதிவாகியுள்ளது. எண்ணிக்கையின்போது, மாதிரி வாக்குப்பதிவையும் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதால் கூடுதலாகி விட்டது. அங்கு மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கு, தேர்தல் கமிஷனிடம் பார்வையாளர் பரிந்துரைத்துள்ளார். அதை ஏற்று இன்று (18-ந் தேதி) காலை 7 மணிக்கு அந்த ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது’.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.